Enable Javscript for better performance
திருப்பரங்குன்றத்தில் அக்.9 இல் மலைமேல் வேல் எடுக்கும் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றத்தில் அக்.9 இல் மலைமேல் வேல் எடுக்கும் திருவிழா

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 26th September 2015 05:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றத்தில் கிராம மக்கள் கொண்டாடும் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழா அக்.9 ஆம் தேதி நடைபெற உள்ளது.

    திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கொண்டாடப்படும் விழாக்களில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் திருவிழாவும் ஒன்று. இது முழுக்க முழுக்க கிராமத்தார் சார்பில் கொண்டாடப்படும் விழாவாகும். தெய்வப் புலவர் நக்கீரரின் சாப விமோசனத்தை நினைவு கூறும் வகையிலும், விவசாயம் செழிக்க வேண்டியும் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் இவ்விழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருவிழா வரும் அக்.9 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.  அன்று காலை 9 மணிக்கு மூலஸ்தானத்தில் உள்ள சுப்பிரமணியசுவாமி திருக்கரத்தில் உள்ள வேல், பல்லக்கில் வைக்கப்பட்டு நகரின் முக்கிய வீதிகள் வழியாக சுற்றி மலைமேல் உள்ள குமரர் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்குள்ள காசித் தீர்த்தத்தில் பால், பன்னீர் உள்ளிட்ட 16 வகை அபிஷேகங்கள் செய்யப்பட்டு, மலை மேல் உள்ள குமரருக்கு வேல் சாற்றி அங்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெறும்.

    இவ்விழாவுக்கு வந்திருக்கும் பக்தர்கள் அனைவருக்கும் கதம்பச் சாப்பாடு வழங்கப்படும். மாலையில் அடிவாரத்தில் உள்ள பழனியாண்டவர் சன்னதிக்கு வேல் கொண்டு வரப்பட்டு அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்று, முக்கிய வீதிகள் வழியாக சுற்றி மீண்டும் மூலவர் சுப்பிரமணியருக்கு சாத்தப்படும். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி க.செல்லதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai