Enable Javscript for better performance
நாளை உலக இருதய தின விழா மாரத்தான் ஓட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் உலக இருதய தினத்தை முன்னிட்டு மாரத்தான் ஓட்டப்பந்தயம் மற்றும் கட்டுரைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) நடைபெறுகின்றன.

     இதுகுறித்து வேலம்மாள் கல்விக்குழுமத் தலைவர் வி.முத்துராமலிங்கம் கூறியதாவது: மதுரை அனுப்பானடி பகுதி சுற்றுச் சாலையிலுள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி அதிநவீன வசதிகளுடன் செயல்படுகிறது.

     உலக இருதய தின கொண்டாட்டம் 2015 எனும் தலைப்பில் ஆடவர் மற்றும் மகளிருக்கான மினிமாரத்தான் ஓட்டப்பந்தயம், கட்டுரைப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை (செப்.27) காலையில் நடைபெறவுள்ளன.

      கல்லூரி வளாகத்தில் ஆண்களுக்கான 5 கி.மீ பந்தயம் காலை 7 மணிக்கும், பெண்களுக்கான 2 கி.மீ பந்தயம் காலை 8 மணிக்கும் நடைபெறும். இதில் பங்கேற்க விரும்புவோர் v‌m​c‌m​a‌r​a‌t‌h‌o‌n@‌g‌m​a‌i‌l.c‌o‌m​ என்ற இணையத்தில் பதிவு செய்யவேண்டும். அன்று காலை 5.30 மணிக்கு வேலம்மாள் கல்லூரிக்கு வரவேண்டும்.

     மாரத்தானில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.10,000, 2 ஆம் பரிசாக 7,000, 3 ஆம் பரிசாக ரூ.5,000 மற்றும் ஆறுதல் பரிசாக 4 முதல் 10 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு தலா ரூ.1000 அளிக்கப்படும்.

     உடல்நலம் காப்போம் நோய்வராமல் தடுப்போம் எனும் தலைப்பில் காலை 10 மணிக்கு நடைபெறும் கட்டுரைப் போட்டியில் பங்கேற்போர், முன்னதாகவே v‌m​c‌e‌s‌s​a‌y‌w‌r‌i‌t‌i‌n‌g@‌g‌m​a‌i‌l.c‌o‌m எனும் இணையத்தில் பதிவுசெய்யவேண்டும்.

     கட்டுரைப் போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசாக ரூ.5,000, 2 ஆம் பரிசாக ரூ. 3,000, 3 ஆம் பரிசாக ரூ.2,000 மற்றும் 4 முதல் 10 இடங்களைப் பிடிப்போருக்கு தலா ரூ.500 வழங்கப்படும். கட்டுரைகள் 4 பக்கங்கள் அல்லது 120 வரிகளுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்றார். பேட்டியின் போது வேலம்மாள் மருத்துவக் கல்லூரி உதவித்தலைவர் பேராசிரியர் டாக்டர் அசோகன், மருத்துவமனை டீன் சீனிவாசன் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai