Enable Javscript for better performance
பாலிடெக்னிக் மாணவர் மாயம்- Dinamani

சுடச்சுட

    

    பாலிடெக்னிக் கல்லூரிக்குச் சென்ற மாணவர் மாயமானது குறித்து போலீஸார்  விசாரித்து வருகின்றனர்.

     மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியைச் சேர்ந்தவர் மணிராம் பிரசன்னா. இவரது மகன் மதுரை அரசு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். கடந்த செவ்வாய்க்கிழமை கல்லூரி சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து ஜெய்ஹிந்த்புரம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

     மாணவி மாயம்: தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்த அப்துல்காதர் மகள் திருச்சியில் கல்லூரியில் படிக்கிறார். இவர் ஏற்கெனவே பயின்ற தெற்கு வெளிவீதியில் உள்ள மாநகராட்சி பள்ளியில் இலவச மடிக்கணினி வாங்க கடந்த 20-ஆம் தேதி சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இதுகுறித்து தெற்குவாசல் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai