Enable Javscript for better performance
மக்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வோம்: மு.க.ஸ்டாலின்- Dinamani

சுடச்சுட

    

    மக்கள் எதிர்பார்ப்பை நிறைவு செய்வோம்: மு.க.ஸ்டாலின்

    By மதுரை  |   Published on : 26th September 2015 05:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்கள் விரும்பும் எதிர்பார்ப்பை திமுக நிறைவு செய்யும் என்று அக்கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

      நமக்கு நாமே - மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தை ஸ்டாலின், மதுரை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கினார். மதுரை அவனியாபுரத்தில் பால் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், பொதுமக்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர், திருப்பரங்குன்றத்தில் மகளிர் சுயஉதவிக் குழுவினர், கல்லூரி மாணவியருடன் ஸ்டாலின் பேசியது: கடந்த திமுக ஆட்சியின் போது சுயஉதவிக் குழுக்களின் செயல்பாடு சிறப்பாகவும், செம்மையாகவும் இருந்தது. தற்போது சுயஉதவிக் குழுக்கள் முடங்கிப் போய் கிடக்கின்றன.

      மதுரை மாவட்டத்தில் இலந்தைக்குளம், வடபழஞ்சி ஆகிய இடங்களில் உள்ள எல்காட் நிறுவனம் மூலம் தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் அரசு கவனம் செலுத்தாததால் வேலை வாய்ப்புகளை பெருக்க முடியவில்லை. 

     மதுவிலக்கு முக்கியப் பிரச்னையாக இருக்கிறது. மதுவிலக்கு பற்றி பேசாமல் எந்தக் கட்சியும் அரசியல் நடத்த முடியாது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல் கையெழுத்து மதுவிலக்கை அமல்படுத்துவது தான்.  பொதுமக்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் இந்த அரசால் அதிருப்திக்கு ஆளாகியுள்ளனர். ஒரு நல்ல மாற்றத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

      அந்த எதிர்பார்ப்பை திமுக நிறைவு செய்யும் என்றார்.

      பிறகு, திருமங்கலம் அருகே உள்ள நக்கலக்கோட்டையில் விவசாயிகளிடையே ஸ்டாலின் பேசினார்.

    விளம்பரத்துக்காக நடைபயணமா?

    திருப்பரங்குன்றத்தில் நடந்த கலந்துரையாடலின் போது ஒரு மாணவி, இந்த நடைபயணம் விளம்பரத்துக்காக செய்கிறீர்களா, இல்லை ஆட்சிக்கு வந்தாலும் தொடருமா என்று ஸ்டாலினிடம் கேட்டார்.

      நீங்கள் இந்த பயணத்தைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று அந்த மாணவியிடமே திருப்பிக் கேட்க, நல்லது நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார். அந்த நம்பிக்கையோடு இருங்கள் என்று பதில் அளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai