Enable Javscript for better performance
ராமேசுவரம்-மதுரை ரயில் 2 மணி நேரம் தாமதம்- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் இருந்து மதுரை வந்த பயணிகள் ரயில் வெள்ளிக்கிழமை 2 மணி நேரம் தாமதமாக மதுரை வந்து சேர்ந்தது.

     ராமேசுவரத்தில் இருந்து மாலை 5.25 மணிக்கு புறப்படும் பயணிகள் ரயில் இரவு 9.25 மணிக்கு மதுரையை வந்தடையும். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மதுரை ரயில் நிலையத்தில் தண்டவாளப் பராமரிப்பு பணிகள் நடைபெற்றதால். மதுரை அருகே உள்ள சிலைமான் ரயில் நிலையத்தில் இரவு 9 மணிக்கு அந்த ரயில் நிறுத்தப்பட்டது. 2 மணி நேரமாகியும் ரயில் புறப்படாததால் பயணிகள் சிலைமான் ரயில் நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து 11 மணிக்கு சிலைமான் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் ரயில் இரவு 11.45 மணிக்கு மதுரை ரயில் நிலையம் வந்து சேர்ந்தது. இந்த 2 மணி நேர தாமதத்தால் பயணிகள் அவதியடைந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai