Enable Javscript for better performance
\\\"அட்டாக்\\\' பாண்டிக்கு மருத்துவமனையில் சிகிச்சை- Dinamani

சுடச்சுட

    

    திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அட்டாக் பாண்டிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சனிக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மதுரையில் முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் வலது கரமாக இருந்த பொட்டு சுரேஷ் கடந்த 2013இல் கொல்லப்பட்டார். இந்த வழக்கில் போலீஸாரால் கடந்த இரண்டரை ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி மும்பையில் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அட்டாக் பாண்டியை நீதிமன்ற அனுமதியின் பேரில் 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மதுரை மாவட்ட 4ஆவது நீதித்துறை நடுவர்மன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள அட்டாக் பாண்டியை, ஆயுதப்படை மைதானத்தில் உள்ள எஸ்.ஐ.யூ. பிரிவு அலுவலகத்தில் வைத்துள்ளனர்.  சனிக்கிழமை காலையில் அட்டாக் பாண்டிக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து ஆயுதப்படை மைதானத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். மிகவும் உடல் சோர்ந்து காணப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

    அதன் பின் மீண்டும் விசாரணை அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அட்டாக் பாண்டியிடம் முக்கிய தகவல்கள் பெறப்பட்டுள்ளதாகவும், அதனை உறுதி செய்ய வழக்கில் மேலும் சிலரை விசாரிக்க வேண்டியுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai