Enable Javscript for better performance
ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    ஆசிரியையிடம் 7 பவுன் சங்கிலி பறிப்பு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 27th September 2015 07:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நடந்து சென்ற பள்ளி ஆசிரியையை தாக்கி 7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றவர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

    மதுரை வில்லாபுரம், மீனாட்சி நகரைச் சேந்தவர் காலேப். இவரது மனைவி தாஸ்கீதா. இவர் மதுரை தெற்குவாசலில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றுகிறார். தாஸ்கீதா, வெள்ளிக்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு நடந்து சென்று கொண்டிருந்த போது மீனாட்சி நகர் பகுதியில் பின்பக்கமாக பைக்கில் வந்த இருவர்,  அவரைத் தாக்கி கழுத்தில் அணிந்திருந்த   7 பவுன் சங்கிலியை பறித்துச் சென்றனர். இது குறித்து  அவனியாபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து  மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai