Enable Javscript for better performance
ஆந்திரத்திலிருந்து 7 மணி நேரத்தில் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த கல்லீரல்: நோயாளிக்கு பொருத்தப்பட்டது- Dinamani

சுடச்சுட

    

    ஆந்திரத்திலிருந்து 7 மணி நேரத்தில் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு வந்த கல்லீரல்: நோயாளிக்கு பொருத்தப்பட்டது

    By மதுரை  |   Published on : 27th September 2015 07:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஆந்திர மாநிலத்திலிருந்து விமானம், சாலை என பயணித்து சுமார் 7 மணி நேரத்தில் மதுரை அப்போலோ மருத்துவமனைக்கு கல்லீரல் உறுப்பு சனிக்கிழமை கொண்டு வரப்பட்டு, நோயாளிக்கு பொருத்தப்பட்டது.

     கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த 40 வயதான ஒருவர் கல்லீரல் பாதிக்கப்பட்டு மதுரை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்திருந்தனர்.

    இந்நிலையில், ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் மூளைச் சாவு அடைந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உடலுறுப்புத் தானம் செய்ய முன்வந்தனர். இதையடுத்து, அவரிடமிருந்து கல்லீரல் பெறப்பட்டு பாதுகாப்புடன் மதுரைக்கு கொண்டு வரப்பட்டது.

     சனிக்கிழமை  நெல்லூர் பகுதியிலிருந்து அதிகாலை 4.45 மணிக்கு எடுத்து வரப்பட்ட கல்லீரல் காலை 9.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. பின்னர் அங்கிருந்து மதுரைக்கு விமானம் மூலம் 10.55 மணிக்கு வந்து சேர்ந்தது. விமான நிலையத்தில் இருந்து தனிக் காரில் கல்லீரலை மருத்துவர்கள் 11.05 மணிக்கு வெளியே கொண்டு வந்து அப்போலோ மருத்துவமனைக்கு புறப்பட்டனர்.

     கல்லீரல் இருந்த கார் வரும் பெருங்குடி விமான நிலையச் சாலை, சுற்றுச் சாலை, பாண்டி கோயில் சந்திப்பு, சிவகங்கைச் சாலை என அனைத்து இடங்களிலும், மாநகர் போக்குவரத்துப் பிரிவினர் காருக்கு எளிதில் வழி கிடைக்கும் வகையில் போக்குவரத்தை கட்டுப்படுத்தினர். இதனால், விமான நிலையத்திலிருந்து மதுரை கே.கே.நகர் பகுதியிலிருக்கும் அப்போலோ மருத்துவமனைக்கு கல்லீரல் சுமார் 18 நிமிடங்களில் வந்து சேர்ந்தது.

    அதன்பின் சம்பந்தப்பட்ட நோயாளிக்கு மாற்று கல்லீரல் பொருத்தும் சிகிச்சையை மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் ஆன்ந்த்கர்கார், மகேஷ்கோபாச்செட்டி, பிரசாந்த்ராவ் ஆகியோர் மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai