Enable Javscript for better performance
இடி தாக்கி மாணவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் பாலமேடு அருகே வெள்ளிக்கிழமை இரவு இடிதாக்கி பிளஸ் 2 மாணவர் உயிரிழந்தார்.

    பாலமேடு அருகே உள்ள வாழைக்கேணி கிராமத்தைச் சேர்ந்தவர் காட்டுராஜா. விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி சின்னப்பிள்ளை. இவர்களது மகன் தெய்வேந்திரன் (17). இவர் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். மற்றொரு மகன் சூரியா. இந்நிலையில் காட்டுராஜா தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்த போது பலத்த மழை பெய்தது. அப்போது இடி மின்னல் தாக்கி தெய்வேந்திரன் உயிரிழந்தார்.

    மேலும் அருகில் தூங்கிக் கொண்டிருந்த காட்டுராஜா, சின்னப்பிள்ளை, சூர்யா ஆகிய 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர். இவர்கள் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  பாலமேடு போலீஸார்  விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai