Enable Javscript for better performance
கல்லூரியில் தொழில் வளர்ச்சி கருத்தரங்கம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தொழில் வளர்ச்சி குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கல்லூரியின் வணிகவியல் மற்றும் கணினிப் பயன்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற இக்கருத்தரங்குக்கு கல்லூரி முதல்வர் எஸ்.அழகர்நாதன் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாளையங்கோட்டை புனித சேவியர் கல்லூரிப் பேராசிரியர் ம.ஜூலியஸ் சீசர் பேசுகையில், இன்றைய கால கட்டத்தில் தொழிலை லாபம் சம்பாதிக்கும் கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். எந்தத் தொழில் செய்தாலும் அதில் சேவை நோக்கம் வேண்டும். சிஎஸ்ஆர் எனப்படும் பெருநிறுவனத்தின் சமூகப் பொறுப்பு கொள்கைகளை அனைத்து நிறுவனங்களும் பின்பற்ற வேண்டும்.

    தமிழகத்தில் தற்போது சில பெருநிறுவனங்கள் மட்டுமே சிஎஸ்ஆர் கொள்கையை பின்பற்றுகின்றன. தொழில் என்பது லாபமும், சேவையும் இணைந்ததாக இருக்க வேண்டும். ஏமாற்றம் மற்றும் கலப்படம் இல்லாமல் செய்யப்படுவதே புனிதமான தொழிலாகும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai