Enable Javscript for better performance
தல்லாகுளம் பெருமாள் கோயில் தெப்பத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயில் தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

    தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசிப் பெருந்திருவிழா கடந்த 16ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்பத் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.

    கோயில் அருகேயுள்ள தெப்பத்தில் அன்னவாகன வடிவத்தில் தெப்பம் அமைக்கப்பட்டிருந்தது. சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு மேல் பிரசன்ன வெங்கடாஜலபதி பிராட்டியருடன் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பத்தில் எழுந்தருளினார். இதையடுத்து தெப்பத்தை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து, மூன்று முறை வலம் வந்தனர்.  அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான பக்தர்கள் கோவிந்தா..கோவிந்தா... கோஷத்துடன் வழிபட்டனர்.சனிக்கிழமை மாலையிலும் கோயிலிலிருந்து பிராட்டியாருடன் புறப்பாடான பெருமாள் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து அருள்பாலித்தார்.

    மாலையில் தெப்பத் திருவிழாவினை முன்னிட்டு தெப்பம் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தெப்பத் திருவிழா நடைபெற்றதையடுத்து ஞாயிறு காலை உற்சவ சாந்தியுடன் புரட்டாசி பெருந்திருவிழா நிறைவடைகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் வி.ஆர்.வெங்கடாசலம், செயல் அலுவலர் க.செல்லத்துரை ஆகியோர் செய்திருந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai