தொட்டப்பநாயக்கனூரில் சேதமடைந்துள்ள விலையில்லா பொருள்கள் விநியோகம்
By உசிலம்பட்டி | Published on : 27th September 2015 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உசிலம்பட்டி அருகே தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சி இ.புதுப்பட்டியில் வழங்கப்பட்ட தமிழக அரசின் விலையில்லா பொருள்களான, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி போன்றவை சேதமடைந்துள்ளன.
பாதி பயனாளிகளுக்கு கொடுத்து முடித்த நிலையில், வாங்கிச் சென்றவர்களில் 60 பயனாளிகளுக்கு மேல் விலையில்லா பொருள்களை திரும்ப கொண்டு வந்துள்ளனர். இவை அனைத்தும் சேதமடைந்துள்ளன. ஆகையால் இவற்றை தங்களுக்கு மாற்றித் தருமாறு கிராம நிர்வாக அலுவலரிடம் கேட்டுள்ளனர்.
இதில்வாக்குவாதம் ஏற்பட்டதால் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல் ஆய்வாளர் துரை.சுப்பிரமணியன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது கிராம நிர்வாக அலுவலர், ஆய்வாளர் ஆகியோர் இப்பகுதியில் அனைவருக்கும் விலையில்லா பொருள்கள் வழங்கிய பின்னர் மொத்தம் எத்தனை பொருள்கள் சேதமடைந்துள்ளன என்பதை தெரிந்து கொண்டு, அனைவரிடமும் சேதமடைந்த பொருள்களை பெற்றுக் கொண்டு மீண்டும் புதிய பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து பொதுமக்கள் கலந்து சென்றனர்.