Enable Javscript for better performance
பைக் மீது கார் மோதல்: பள்ளி மாணவர்கள் இருவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    பைக் மீது கார் மோதல்: பள்ளி மாணவர்கள் இருவர் சாவு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 27th September 2015 07:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் அருகே நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை பைக் மீது கார் மோதியதில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர்.

       கர்நாடக மாநிலம் பெங்களூரை அடுத்த சக்கூர் பகுதியைச் சேர்ந்தவர் பிரசன்னா (40). இவர், தனது தாயார் ஹேமலதா (65), மனைவி சுஜிதா (35), மகன் சுஜித் (16), மகள் சஞ்சனா (5) ஆகியோருடன் காரில் திருச்செந்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். காரை பிரசன்னாவே ஓட்டி வந்தார். திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளம் நான்கு வழிச் சாலையில் கார் வந்து கொண்டிருந்தது.

    அப்போது, திருநகரில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் திருநகர் கோவிந்தசாமி தெருவைச் சேர்ந்த ரவிராஜன் மகன் அஜய் (16) மற்றும் தென்பழஞ்சியைச் சேர்ந்த லெட்சுமணன் மகன் ஆகாஷ் (16) இருவரும் டியூசன் செல்வதற்காக பைக்கில் தென்பழஞ்சியில் இருந்து வந்து கொண்டிருந்தனர். நான்கு வழிச்சாலையை இவர்கள் கடக்க முயன்ற போது, பைக் மீது கார் மோதியது. இதில் மாணவர்கள் அஜய்யும், ஆகாஷும் அங்கேயே உயிரிழந்தனர்.

     காரில் வந்த பிரசன்னா, அவரது தாயார் ஹேமலதா உள்ளிட்ட 5 பேரும் காயமடைந்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

     இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai