Enable Javscript for better performance
மாநில அளவிலான விநாடி- வினா போட்டி: வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி முதலிடம்- Dinamani

சுடச்சுட

    

    மாநில அளவிலான விநாடி- வினா போட்டி: வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி முதலிடம்

    By மதுரை  |   Published on : 27th September 2015 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான கணித விநாடி- வினா போட்டியில் சென்னை வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி முதலிடம் பெற்றது.

    மதுரை வேலம்மாள் பொறியியல் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் 26 கல்லூரிகளில் இருந்து 52 அணிகள் பங்கேற்றன. கலசலிங்கம் பல்கலைக் கழக பேராசிரியர் கே.கருப்பசாமி நடுவராக செயல்பட்டார். கல்லூரி முதல்வர் என்.சுரேஷ்குமார் வரவேற்றார். இதில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை சென்னை வேலம்மாள் தொழில் நுட்பக் கல்லூரி அணியினர் பெற்றனர். அவர்களுக்கு முறையே ரூ.5 ஆயிரம் மற்றும் ரூ.3 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. மூன்றாமிடம் பெற்ற அண்ணா பல்கலைக் கழக அணிக்கு ரூ.2 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

    கணிதத் துறைத் தலைவர் எஸ்.வேலம்மாள் நன்றி கூறினார். உதவி பேராசிரியர்கள் எஸ்.கார்த்திகேயன், எஸ்.மீனாட்சி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai