Enable Javscript for better performance
வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்- Dinamani

சுடச்சுட

    

    வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் பெற விண்ணப்பிக்கலாம்

    By மதுரை  |   Published on : 27th September 2015 07:07 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வனவிலங்குகளால் ஏற்படும் பயிர் சேதங்களுக்கு நிவாரணம் பெற, சேதம் ஏற்பட்ட 3 நாள்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என வனத்துறை அறிவித்துள்ளது.

    இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் நிகார் ரஞ்சன் வெளியிட்டுள்ள செய்தி:

    மதுரை மாவட்டத்துக்குள்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் தோட்டங்களில் வன விலங்குகளால் பயிர் சேதம் ஏற்பட்டால் 3 நாள்களுக்குள் தேவையான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட வனச்சரகர் மூலமாக மாவட்ட வன அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

    மனுவுடன், பயிர் சேதம் குறித்த வெவ்வேறு 3 புகைப்படங்கள், பட்டா நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேளாண் உதவி இயக்குநர், வனச்சரகர் ஆகியோரது பரிந்துரை கடிதம் இணைக்க வேண்டும்.

    இது தொடர்பான விவரங்களுக்கு வன சரகர்களை 94454-68481 (மதுரை), 94454-68487 (உசிலம்பட்டி), 94454-68489 (சோழவந்தான்) என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai