Enable Javscript for better performance
வருமான வரி செலுத்துவோருக்கு நாளை விழிப்புணர்வுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வருமான வரி செலுத்துவோருக்கு நாளை விழிப்புணர்வுக் கூட்டம்

    By மதுரை  |   Published on : 27th September 2015 07:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமான வரி செலுத்துவோருக்கான விழிப்புணர்வுக் கூட்டம் மடீட்சியா அரங்கில் திங்கள்கிழமை (செப்.28) நடைபெற உள்ளது.

     மதுரை வருமான வரித் துறை மற்றும் மடீட்சியா இணைந்து நடத்தும் இந்தக் கூட்டத்தில் இணைய வழி சேவையை பயன்படுத்தும் வழிமுறைகள், வரி செலுத்துவதால் நுகர்வோருக்கு கிடைக்கும் நன்மைகள் மற்றும் இணைய வழி சேவைகளை பயன்படுத்துவதில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும். அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில், வருமானவரித் துறை இணை ஆணையர் எஸ்.ரங்கராஜன் கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்க உள்ளார். இதில் தொழிலதிபர்கள், வணிகர்கள், அரசு அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்ளலாம் என்று மடீட்சியா தலைவர் எல்.முராரி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai