Enable Javscript for better performance
வாடிப்பட்டி அருகே மரம் விழுந்து இளம்பெண் சாவு- Dinamani

சுடச்சுட

    

    வாடிப்பட்டி அருகே மரம் விழுந்து இளம்பெண் சாவு

    By வாடிப்பட்டி  |   Published on : 27th September 2015 07:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாடிப்பட்டி அருகே பெய்த பலத்த மழையால் மரம் முறிந்து விழுந்து இளம்பெண் உயிரிழந்தார்.

     மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே குட்லாடம்பட்டி சிறுமலையில் குடியிருந்து வருபவர் மாரியப்பன் (35), இவரது மனைவி அழகம்மாள் (28). இவர்களுக்கு அன்பரசு (8), மதுமிதா (6) ஆகிய இரண்டு குழந்தைகள் உள்ளனர். மாரியப்பனும், அழகம்மாளும் சிறுமலை மலை கிராமத்தில் தங்கி விவசாய கூலி வேலை செய்து வந்தனர். மாரியப்பன் தாயார் பூச்சம்மாள் தாடகைநாச்சி அருவியின் எதிரில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி வேலை செய்து வருகிறார்.

     அவரை பார்ப்பதற்காகவும், தாய் வீட்டில் உள்ள அன்பரசு, மதுமிதாவை பார்ப்பதற்காகவும் மாரியப்பனும், அழகம்மாளும் வெள்ளிக்கிழமை இரவு 10 மணிக்கு சிறுமலையிலிருந்து காட்டுப்பாதையில் குட்லாடம்பட்டிக்கு இறங்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது கண்ணாடிபாறை என்ற இடத்தில் வந்த போது இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரக்கிளை முறிந்து அழகம்மாள் மீது விழுந்தது. அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை மாரியப்பனும் அவரது தம்பி முருகனும் டோலி மூலம் குட்லாடம்பட்டிக்கு கொண்டு வந்தனர். அங்கு பரிசோதித்த போது வரும் வழியிலேயே அழகம்மாள் உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து மாரியப்பன் கொடுத்த புகாரின் பேரில் வாடிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai