Enable Javscript for better performance
அட்டாக் பாண்டி மீண்டும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்- Dinamani

சுடச்சுட

    

    அட்டாக் பாண்டி மீண்டும் மதுரை நீதிமன்றத்தில் ஆஜர்

    By மதுரை  |   Published on : 28th September 2015 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திமுக பிரமுகர் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அட்டாக் பாண்டி மதுரை நீதிமன்றத்தில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார்.

    மதுரையில் மு.க.அழகிரிக்கு வலது கரமாகத் திகழ்ந்தவர் பொட்டு சுரேஷ். கட்சியிலும், கடந்த திமுக ஆட்சியிலும் அதிகாரமிக்கவராகத் திகழ்ந்த இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு ஜனவரியில் டி.வி.எஸ்.நகர் பகுதியில் மர்மக்கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார்.

    பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக போலீஸாரால் தேடப்பட்டு வந்த திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி மும்பையில் கடந்த 21-ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

    மதுரை நீதிமன்றத்தில் கடந்த 22 ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்ட அட்டாக் பாண்டியை பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். இதையடுத்து போலீஸார் கோரியதன் பேரில் 4 நாள்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரிக்க கடந்த 23-ஆம் தேதி நீதிமன்றம் அனுமதித்தது.

    மதுரை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள சிறப்பு விசாரணைப் பிரிவு அலுவலகத்தில் விசாரிக்கப்பட்ட அட்டாக் பாண்டி ஞாயிற்றுக்கிழமை மாலை மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் எண் 2 நீதிபதி பாரதிராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.

    அப்போது போலீஸார் தரப்பில் மேலும் 4 நாள்கள் விசாரணைக்கு அனுமதி கோரப்பட்டது. ஆனால், இதை ஏற்க மறுத்த நீதிபதி, காவலுக்கு கோரும் மனுவை சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட்டார். அத்துடன் அக்டோபர் 6 ஆம் தேதி வரை அட்டாக் பாண்டியை நீதிமன்ற காவலில் வைக்கவும் உத்தரவிட்டார்.

    இதையடுத்து அட்டாக் பாண்டி பாளையங்கோட்டை சிறைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai