Enable Javscript for better performance
இலவச கண்சிகிச்சை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மற்றும் வாடிப்பட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக இலவச கண்சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

    கிருஷ்ணன்கோயில் சங்கரா கண் மருத்துவமனையுடன் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா கட்டடத்தில் சனிக்கிழமை நடத்தினர். முகாமுக்கு பாலசுந்தரம் தலைமை வகித்தார். குணசேகரன், காக்கும்கரங்கள் நற்பணி மன்ற தலைவர் கராத்தே சிவா, செயலாளர் ஆட்டோ கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் முகிலன் வரவேற்றார்.

    முகாமினை மண்டலத் தலைவர் சிவக்குமார் தொடக்கிவைத்தார். இதில் 180 பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 87 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக தேர்வுசெய்யப்பட்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai