Enable Javscript for better performance
உலக சுற்றுலா தினம்: பாரம்பரிய நடைபயணம்- Dinamani

சுடச்சுட

    

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை மதுரையில் பாரம்பரிய நடைபயணம் நடந்தது.

    உலக சுற்றுலா தினமாக ஆண்டு தோறும் செப்டம்பர் 27 கடைப்பிடிக்கப்படுகிறது. இதையடுத்து மதுரையில் அருள்மிகு மீனாட்சிசுந்தரேசுவரர் திருக்கோயில் மேலக்கோபுரத் தெருவிலிருந்து பாரம்பரிய நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

    மதுரை மாவட்ட சுற்றுலாத்துறை மூலம் நடைபெற்ற பாரம்பரிய நடைபயணத்தில் கேட்டரிங் கல்லூரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் கலந்துகொண்டனர். நடைபயணத்தை மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். சுற்றுலா அலுவலர் கே.தர்மராஜ் முன்னிலை வகித்தார்.

    மேலக்கோபுரத்தெரு, ஜான்சிராணி பூங்கா ரோசரி சர்ச், மேலமாசி வீதியில் உள்ள காதிகிராப்ட் அலுவலகம் (இங்குதான் காந்தியடிகள் அரையாடை தரித்தார்), இம்மையில் நன்மை தருவார் திருக்கோயில், மதனகோபாலசுவாமி திருக்கோயில், காஜிமார் தெரு பள்ளிவாசல், காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையம் அருகேயுள்ள கோட்டை கொத்தளம் ஆகிய இடங்களுக்கு நடை பயணமாகச் சென்றனர்.

    காம்ப்ளக்ஸ் பேருந்து நிலையத்தின் கோட்டை கொத்தளத்தில் தப்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடைபயணத்தில் பங்கேற்றவர்களுக்கு பாரம்பரிய உணவான பணியாரம், திணைமாவு லட்டு, கம்மங்கூழ், நவதானிய வடைகள் கொடுக்கப்பட்டன.

    உலகத் தமிழ்ச்சங்கம் மதுரையின் தனி அலுவலர் க.பசும்பொன், டிராவல்ஸ் கிளப் உறுப்பினர் பார்ச்சூன் பாண்டியன் ஹோட்டல் வாசுதேவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai