Enable Javscript for better performance
திமுக பிரமுகர் மகன் மீது தாக்குதல்- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் திமுக பிரமுகரின் மகன் மீது தாக்குதல் நடத்திய நான்கு பேர் மீது போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    மதுரை காமராஜர் சாலை, பகத்சிங் தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் திமுக வின் 52ஆவது வட்டச் செயலராக இருந்து வருகிறார். இவரது மகன் வேல்பாண்டி(17). இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை அவ்வழியே சைக்கிளில் வரும் போது அதே பகுதியைச் சேர்ந்த கருவாயன், அருள்முருகன், பாண்டி, கண்ணன் ஆகிய நான்கு பேர் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். வாக்குவாதம் முற்றியதையடுத்து நான்கு பேரும் சேர்ந்து வேல்பாண்டியை தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து பாலசுப்பிரமணியன் அளித்த புகாரின் பேரில் தெப்பக்குளம் போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai