Enable Javscript for better performance
திருப்பரங்குன்றம் கோயிலில் அக்.13 இல் நவராத்திரி உற்சவம்- Dinamani

சுடச்சுட

    

    திருப்பரங்குன்றம் கோயிலில் அக்.13 இல் நவராத்திரி உற்சவம்

    By திருப்பரங்குன்றம்,  |   Published on : 28th September 2015 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் அக்.13 செவ்வாய்க்கிழமை நவராத்திரி உற்சவம் தொடங்குகிறது.

    திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் இந்த ஆண்டு நவராத்திரி உற்சவம் அக்.13 ஆம் தேதி தொடங்கி அக்.21 ஆம் தேதி வரை 9 நாள்கள் நடைபெறும். விழாவினை முன்னிட்டு தினமும் மாலையில் கோயில் விசாக கொறடு மண்டபத்தில் அருள்மிகு கோவர்தனாம்பிகை இராஜராஜேஸ்வரி, நக்கீரருக்கு காட்சி கொடுத்தல், ஊஞ்சல், திருக்கல்யாணம் உள்ளிட்ட பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    விழாவின் பத்தாம் நாளான அக்.22 ஆம் தேதி அம்பு போடும் விழா நடைபெறும். இதனை முன்னிட்டு அருள்மிகு சுப்பிரமணியசுவாமி பசுமலையில் உள்ள அம்பு போடும் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி க.செல்லதுரை மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai