Enable Javscript for better performance
திருமங்கலத்தில் தமாகா செயற்குழுக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    திருமங்கலத்தில் தமாகா செயற்குழுக் கூட்டம்

    By திருமங்கலம்,  |   Published on : 28th September 2015 04:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமாகா தலைவர் ஜி.கே.வாசன் திருமங்கலத்திற்கு (செப். 29) செவ்வாய்க்கிழமை வருகைதரவிருக்கிறார். இதை முன்னிட்டு செயற்குழுக் கூட்டம் முன்னாள் எம்பி என்.எஸ்.வி.சித்தன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    கூட்டத்தில் என்.எஸ்.வி.சித்தன் பேசியதாவது: செப்டம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு வலையங்குளத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அங்கு அவர் விவசாயிகளை சந்தித்து உரையாடுகிறார். அதன்பின் திருமங்கலம் மறவன்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுரை தெற்கு மாவட்ட தமாகா அலுவலகத்தை திறந்து வைக்கிறார். பின்னர் திருமங்கலம் தேவர் சிலை அருகில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார் என்றார். கூட்டத்தில் தமாகா தெற்கு மாவட்ட தலைவர் கே.கே.குருசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.மகேந்திரன், மாவட்ட மகளிர் அணி தலைவி ஏ.ஆனந்தி, மாவட்ட செயலர் பி.சிவன்காளை, பொருளாளர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai