Enable Javscript for better performance
மனைவியை கொன்று கணவர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியை கொலை செய்த கணவர், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

    மேலூர் வட்டம் கீழவளவு அருகே உள்ள அடைஞ்சான் கண்மாய்ப்பட்டியை சேர்ந்தவர் பாண்டிச்செல்வம் (30). இவரது மனைவி உமா (27). இவர்களுக்கு 9 வயதில் மகன் உள்ளார். கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு இருந்துவந்ததாம். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அவர்களிடையே மீண்டும் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பாண்டிச்செல்வம் மனைவியின் கை கால்களை கயிற்றால் கட்டி, கழுத்தை துணியால் இறுக்கிக் கொலைசெய்துள்ளார். பின்னர் தன்னை போலீஸார் கைதுசெய்துவிடுவார்கள் என பயந்து, வீட்டில், சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்த கீழவளவு போலீஸார் இருவரது சடலங்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai