Enable Javscript for better performance
மலேசியாவுக்கு கடத்த இருந்த 247 நட்சத்திர ஆமைகள் மீட்பு- Dinamani

சுடச்சுட

    

    மலேசியாவுக்கு கடத்த இருந்த 247 நட்சத்திர ஆமைகள் மீட்பு

    By திருப்பரங்குன்றம்  |   Published on : 28th September 2015 04:19 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை விமான நிலையத்திலிருந்து மலேசியாவுக்கு கடத்த இருந்த 247 நட்சத்திர ஆமைகளை விமானநிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை கைப்பற்றினர்.

    மதுரை விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தனியார் விமானம் புறப்பட இருந்தது. அதில் பயணம் செய்யவிருந்த பயணிகளை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

    சோதனையில் பயணி ஒருவர் கொண்டுவந்த பையில் நட்சத்திர ஆமைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதையடுத்து அவரை விசாரித்தபோது அவர் சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த அப்துல்லா மகன் அப்துல்அலீம் (60) என்பதும், அவர் இலங்கையிலிருந்து மலேசியாவுக்கு ஆமைகளை கடத்த முயன்றதும் தெரிந்தது.

    இதையடுத்து அப்துல்அலீமை கைது செய்து அவரிடமிருந்த 247 நட்சத்திர ஆமைகள் கைப்பற்றப்பட்டன.

    இதுகுறித்து விமான நிலைய அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து நட்சத்திர ஆமைகளை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai