Enable Javscript for better performance
வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் உலக இருதய தின மாரத்தான் போட்டி- Dinamani

சுடச்சுட

    

    வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் உலக இருதய தின மாரத்தான் போட்டி

    By மதுரை,  |   Published on : 28th September 2015 04:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    உலக இருதய தினத்தை முன்னிட்டு மதுரை அவனியாபுரம் சுற்றுச்சாலை பகுதியில் உள்ள வேலம்மாள் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை சார்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது.

    ஆடவருக்கான போட்டியை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க முதுநிலைத் தலைவர் எஸ்.ரத்தினவேல் தொடங்கிவைத்தார். மகளிருக்கான போட்டியை பிஎஸ்என்எல் பொது மேலாளர் ராஜம் தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி ஆணையர் (பொறுப்பு) செ.சாந்தி, வேலம்மாள் கல்விக்குழும இயக்குநர் எம்.வேல்மோகன் மற்றும் வேலம்மாள் மருத்துவக் கல்லூரி டீன் டாக்டர் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    பரிசுபெற்றவர்கள் விவரம்: கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற மாரத்தானில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். அதில் மாணவர்களுக்கான பிரிவில் மாரிசரத், பாலமுருகன், ஹரிஹரசுதன் ஆகியோர் முதல் 3 இடங்களுக்கான பரிசுகளைப் பெற்றனர்.

    பொதுமக்களுக்கான பிரிவில் கார்த்திக், ரஞ்சித்குமார், கண்ணன் ஆகியோரும், மகளிருக்கான பிரிவில் விஜயலட்சுமி, கவிதா, கார்த்திகா ஆகியோரும் முதல் 3 இடங்களுக்கான பரிசுகளைப் பெற்றனர்.

    இருதய தின கட்டுரைப் போட்டியிலும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai