உசிலம்பட்டி நகர் மன்றம் கூட்டம்
By உசிலம்பட்டி | Published on : 29th September 2015 07:04 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
உசிலம்பட்டி நகர் மன்ற மாதந்திர கூட்டம் நகராட்சி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு நகர் மன்ற தலைவர் யு.பி.ஆர். பஞ்சம்மாள் தலைம வகித்தார். நகராட்சி மேலாளர் முருகதாஸ் முன்னிலையில் நடைபெற்றன. இதில் 19 நகர் மன்ற உறுப்பினர்கள், துணைத்தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய திமுக கவுன்சிலர் சுகந்திரம் உசிலம்பட்டி நகராட்சியில் 120 வீடுகளுக்கு கொடுக்கப்பட வேண்டிய இலவச குடிநீர் இணைப்பு தராமல் இழுத்தடிக்கப்படுகின்றன. என புகார் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த நகர் மன்ற தலைவர் உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்று தெரிவித்தார். இக் கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேல்முருகன், சொக்கலிங்கம், சரண்யா, பழனிகுமார் ஆகிய நான்கு நகர் மன்ற உறப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.