Enable Javscript for better performance
கரும்பு பரிந்துரை விலையை அரவை தொடங்குவதற்கு முன்பே அறிவிக்க வலியுறுத்தல் - Dinamani

சுடச்சுட

    

    கரும்பு பரிந்துரை விலையை அரவை தொடங்குவதற்கு முன்பே அறிவிக்க வலியுறுத்தல்

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்புக்கான பரிந்துரை விலையை அரவை தொடங்குவதற்கு முன்பு அறிவிக்க வேண்டும் என அகில இந்திய கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

     மதுரையில் ஞாயிறு, திங்கள் இரு நாள்கள் நடைபெற்ற கரும்பு விவசாயிகள் சங்க  அகில இந்திய மாநாட்டில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

     தீர்மானங்கள் விவரம்:

     தமிழகத்தில் உள்ள சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ.1,200 கோடி நிலுவை வைத்துள்ளன. இத்தொகையையும், மாநில அரசால் அறிவிக்கப்பட்டு கரும்புக்கான தொகை ரூ.720 கோடியை தனியார் ஆலைகளிடம் இருந்து பெற்றுத் தர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பு பருவத்துக்கு (2015-2016) கரும்புக்கான பரிந்துரை விலையை அரவை தொடங்குவதற்கு முன்பு தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.

     தமிழகத்தில் உள்ள 16 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளின் நிர்வாகச் சீர்கேடுகளைக் களையவும், ஏற்கெனவே திட்டமிட்டபடி 12 சர்க்கரை ஆலைகளில் இணை மின்உற்பத்தித் திட்டப் பணிகளைத் தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

     கூட்டுறவு ஆலைகள் ரூ.1,800 கோடி கடன் சுமையில் உள்ளன. இக் கடனை மாநில அரசு ஏற்றுக் கொள்வதுடன், அரவைத் திறனை உயர்த்த வேண்டும். மத்திய அரசின் கரும்பு மேம்பாட்டு நிதியிலிருந்து பெற்று இப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். வேண்டும். வெட்டுக் கூலியை ஆலை நிர்வாகமே ஏற்க வேண்டும். பாண்டியராஜபுரம் சர்க்கரை ஆலையை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

     இம் மாநாட்டில், அகில இந்திய அளவில் 24 பேர் கொண்ட  ஒருங்கிணைப்புக் குழு தேர்வு செய்யப்பட்டது. ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக என்.கே.சுக்லா, துணைத் தலைவராக விஜூ கிருஷ்ணன் ஆகியோர் தேர்ந்ததெடுக்கப்பட்டனர். இக் குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த டி.ரவீந்திரன், என்.பழனிச்சாமி, எம்.சின்னப்பா, ஏ.ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai