Enable Javscript for better performance
சாலை வசதி கோரி மாணவர்கள் மனு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள வடுகபட்டி ஒத்தவீடு கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் சாலை வசதி கோரி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

     எங்களது கிராமத்தில் இருந்து விக்கிரமங்கலம், கருமாத்தூர், பாப்பாபட்டி, உசிலம்பட்டி, நாகமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு 20-க்கும் மேற்பட்டோர் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்கின்றனர். சாலை வசதி இல்லாததால், பள்ளிக்கு சென்றுவர சிரமமாக உள்ளது. மழை நேரங்களில் கண்மாய் பெருக்கெடுத்து தற்போது பயன்படுத்தும் சாலையையும் மூடிவிடும். இதனால் தண்ணீரில் இறங்கி தான் செல்ல வேண்டிய நிலை இருக்கிறது. ஆகவே, எங்களது கிராமத்துக்கு சாலை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai