Enable Javscript for better performance
சுற்றுலாப் பயணிகள் விரும்பத்தக்கதாக மதுரை மாநகரை மேம்படுத்தவேண்டும்: ஆட்சியர் எல்.சுப்பிரமணியன்- Dinamani

சுடச்சுட

    

    சுற்றுலாப் பயணிகள் விரும்பத்தக்கதாக மதுரை மாநகரை மேம்படுத்தவேண்டும்: ஆட்சியர் எல்.சுப்பிரமணியன்

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் விரும்பத்தக்க வகையில் மதுரைமாநகரை மேம்படுத்த மிடுக்கான நகர்த்திட்டம் செயல்படுத்தப்படவேண்டும் என மாவட்ட ஆட்சியர் எல்.சுப்பிரமணியன் கூறினார்.

     மதுரை ராஜாமுத்தையா மன்றத்தில் திங்கள்கிழமை மாலை நடந்த மிடுக்கான நகர்த்திட்டம் குறித்த விழிப்புணர்வு மற்றும் கருத்து தெரிவிக்கும் முறை விளக்கக் கூட்டத்தில் அவர் பேசியதாவது: பாரம்பரியமான நகராக மதுரை உள்ளது. வெளிமாநிலத்தவரும், வெளிநாட்டவரும் விரும்பிவந்து நகரின் கட்டடக்கலை, பாரம்பரியத்தை பார்த்துவியக்கின்றனர். ஆகவே சுற்றுலாப் பயணிகள் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவது அவசியம்.

     மருத்துவம், கல்வியில் சென்னை, கோவைக்கு அடுத்ததாக மதுரை மேம்பட்டுவருகிறது. ஏற்கெனவே பல்கலைக்கழகம், தொழிற்கல்வி கல்லூரிகள் உள்ள நிலையில் அண்ணா பல்கலைக்கழக மண்டல அலுவலகம், மதர்தெரசா பல்கலைக்கழக கட்டடம் கட்டப்பட்டுள்ளன. விரைவில் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக்கழக கட்டம் நாலரை ஏக்கரில் கட்டப்படவுள்ளன.

     சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும் கட்டப்பட்டுள்ளது. ஆகவே சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ப போக்குவரத்து வசதியை ஏற்படுத்துவது அவசியம். வைகை மாசுபடுவது குறைக்கப்பட்டுவருகிறது. முழுமையாக வைகையில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும்.

     தென்மாவட்ட தலைநகராக விளங்கும் மதுரையை அழகானநகராக்க மக்கள் முன்வரவேண்டும் என்றார்.

     மாநகராட்சி மேயர் வி.ராஜன்செல்லப்பா பேசுகையில், மிடுக்கான நகர்த்திட்ட கருத்துக்கேட்பில் முதல் நாள் 50 ஆயிரம் பேர் கருத்து தெரிவித்து வாக்களித்துள்ளனர் என்றார்.

     மாநகராட்சி ஆணையர் சி.கதிரவன் பேசுகையில், புதுமையான இத்திட்டத்தில் மாநகருக்கு அதிக பயனளிக்கும் திட்டம் குறித்து மக்கள் கருத்துக்கூறவேண்டும் என்றார். நகர்ப் பொறியாளர் ஏ.மதுரம் இணையத்தில் மிடுக்கான நகர்த்திட்டம் குறித்த கருத்தை தெரிவிப்பது குறித்து விளக்கினார்.

     கருத்துச்சீட்டு: கூட்டத்தில் பங்கேற்ற அரசினர் மீனாட்சி மகளிர் கல்லூரி மாணவியர் உள்ளிட்டோரிடம்  கருத்துக் கூறும் படிவம் அளிக்கப்பட்டு, அதை தூய்மைத் திட்ட பிளாஷ்டிக் கூடையில் சேகரித்தனர்.

     மிடுக்கான நகர்த்திட்ட கருத்துக்கேட்பு வாக்கெடுப்பு செவ்வாய்க்கிழமையுடன் (செப்.29) முடிவடையும் என்றும் மாநகராட்சி அதிகாரிகள் கூறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai