Enable Javscript for better performance
சென்னையைச் சேர்ந்தவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னையைச் சேர்ந்தவரிடம் பணம் பறித்த 2 பேர் கைது

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னையைச் சேர்ந்தவரிடம் பணம் பறித்த 2 வடமாநில இளைஞர்களைப் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

     சென்னையைச் சேர்ந்தவர் மைனாமுகம்மதுமீரான்கனி (35). சொந்த வேலையாக மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்தவர் மாட்டுத்தாவணி பஸ் நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது அவரிடமிருந்த பணப்பையை மர்மநபர்கள் இருவர் பறித்துக்கொண்டு ஓடியுள்ளனர். அங்கிருந்தவர்கள் துணையோடு பணம் பறித்தவரை மைதானமுகம்மதுமீரான்கனி விரட்டிப் பிடித்துள்ளார். அண்ணாநகர் குற்றப்பிரிவு போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்டவர்கள் மதுரையில் வசிக்கும் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த மணிதேவ் (31), சுரேஷ்குமார் (23) எனத் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai