Enable Javscript for better performance
டிச.15-ல் சர்க்கரை ஆலை முற்றுகை போராட்டம்: கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்- Dinamani

சுடச்சுட

    

    டிச.15-ல் சர்க்கரை ஆலை முற்றுகை போராட்டம்: கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானம்

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.15-ல் நாடு முழுவதும் சர்க்கரை ஆலைகளில் முற்றுகை போராட்டம் நடத்துவது என்று கரும்பு விவசாயிகள் சங்க மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

     தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் முதல் அகில இந்திய மாநாடு மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநாட்டின் ஒரு பகுதியாக மாரியம்மன் தெப்பக்குளம் பகுதியிலிருந்து கரும்பு விவசாயிகள் பேரணி மேற்கொண்டனர். இதைத்தொடர்ந்து ஓபுளா படித்துறையில் நடைபெற்ற நிறைவு விழா மற்றும் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்க பொதுச்செயலர் மற்றும் முன்னாள் எம்.பி. ஹன்னன் முல்லா பேசியதாவது:

     கரும்பு விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் நிறைவேற்றித் தர வலியுறுத்தி நாடு முழுவதும் உள்ள சர்க்கரை ஆலைகளிலும், கரும்பு விவசாயிகளிடமும் டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை ஒரு வாரம் பிரசாரம் மேற்கொள்ளப்படும். அதைத் தொடர்ந்து டிசம்பர் 15 அன்று நாடு முழுவதும் அனைத்து சர்க்கரை ஆலைகளிலும் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். கரும்பு விவசாயிகளின் பண பாக்கியை செலுத்தும் வரை இந்த முற்றுகை போராட்டம் தொடரும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai