Enable Javscript for better performance
தவறான அறுவை சிகிச்சை: தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    தவறான அறுவை சிகிச்சை: தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மனு தள்ளுபடி

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தவறான அறுவை சிகிச்சையால் பெண் பலியானதற்கு ரூ.12 லட்சம் இழப்பீடு வழங்குமாறு தனி நீதிபதி உத்தரவிட்டதை எதிர்த்து சுகாதாரத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

      விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டியைச் சேர்ந்த சண்முகக்கனி என்பவரது மனைவி ராமலட்சுமி. 2005 இல் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் குடும்பகட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். பின்பு வயிற்று வலியால் அவர் உயரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றுப்பகுதியில் அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தும் துணி இருந்ததால் அவர் உயிரிழந்தது தெரியவந்தது.  இது தொடர்பான மனுவை விசாரித்த தனி நீதிபதி, ராமலட்சுமி குடும்பத்துக்கு ரூ.12.55 லட்சம் இழப்பீடு வழங்கவும் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.  இதை எதிர்த்து சுகாதாரத்துறை தாக்கல் செய்த மேல்முறையீடு மனுவை நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரித்தது. தனி நீதிபதி உத்தரவில் தலையிட முகாந்திரம் இல்லை என குறிப்பிட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai