Enable Javscript for better performance
தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி: அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்- Dinamani

சுடச்சுட

    

    தென்னிந்திய அளவிலான ஹாக்கி போட்டி: அமெரிக்கன் கல்லூரி சாம்பியன்

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் நடைபெற்ற தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியில் அமெரிக்கன் கல்லூரி சாம்பியன் பட்டம் வென்றது.

     கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 23ஆவது காருண்யா இவாஞ்சலின் தென்னிந்திய கல்லூரிகளுக்கு இடையிலான ஹாக்கி போட்டியின் இறுதி ஆட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. முன்னதாக நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் கோவை பிஎஸ்ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 4-3 என்ற கோல் கணக்கிலும், அரையிறுதி ஆட்டத்தில் கோவை காருண்யா பல்கலைக்கழகத்தை 2-0 என்ற கோல் கணக்கிலும், இறுதி ஆட்டத்தில் சென்னை எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தை 3-2 என்ற கோல் கணக்கில் வென்று காருண்யா இவாஞ்சலின் கோப்பையை கைப்பற்றியது. வெற்றி பெற்ற அமெரிக்கன் கல்லூரி அணியினருக்கு ரூ.15 ஆயிரம் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai