Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான இசை, நடனப் போட்டிகள்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான இசை, நடனப் போட்டிகள்

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான இசை மற்றும் நடனப் போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றது.

     தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்தின் சிறப்புகளையும் வெளிப்படுத்தும் வகையில், அந்தந்த மாவட்டங்களில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இசை மற்றும் நடனப் போட்டிகளை நடத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. மதுரையில் நடைபெறும் போட்டிகளுக்கு மதுரையின் பெருமை எனும் தலைப்பு வழங்கப்பட்டது. மதுரை அருகேயுள்ள ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற போட்டியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோ.ஆஞ்சலோ இருதயசாமி துவக்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் ஏ.முத்துக்குமரகேசன் தலைமை வகித்தார்.

     இதில் 60-க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கலந்துகொண்டன. இசை மற்றும் நடனப் போட்டிகள் அனைத்தும் ஒவ்வொரு அணியிலும் 10 பேர் வீதம் குழுப் போட்டிகளாக நடைபெற்றன. இசை போட்டிகளில், பசுமலை சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், சௌராஷ்டிரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், கேத்ரன்ஹால் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன. நடனப் போட்டியில், ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி முதலிடமும், தெப்பக்குளம் அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி இரண்டாம் இடமும், நேரு வித்யசாலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி மூன்றாம் இடமும் பெற்றன.

     ஒவ்வொரு மாவட்டத்திலும் இசை மற்றும் நடனப் போட்டிகளில் முதலிடம் பெற்ற அணி சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டிகளில் கலந்துகொள்வர். மாநில அளவிலான போட்டிகளில் வெற்றி பெறும் அணிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai