Enable Javscript for better performance
மகளிர் கல்லூரிகளுக்கான வாலிபால் போட்டி: மதுரை அணிகள் முன்னிலை- Dinamani

சுடச்சுட

    

    மகளிர் கல்லூரிகளுக்கான வாலிபால் போட்டி: மதுரை அணிகள் முன்னிலை

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக மகளிர் கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டியில் மதுரை கல்லூரி அணிகள் முன்னிலை வகிக்கின்றன.

     டோக் பெருமாட்டி கல்லூரியில் திங்கள்கிழமை துவங்கிய போட்டியில் 14 அணிகள் பங்கேற்றன. காலிறுதியின் முதல் ஆட்டத்தில் ராஜபாளையம் ஏ.கே.தர்மராஜ் கல்லூரியும், மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியும் மோதின. இதில் 25-4, 25-5 எனும் செட்களில் டோக் பெருமாட்டி கல்லூரி வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரியும், விருதுநகர் வன்னியபெருமாள் கல்லூரியும் மோதின. இதில் 25-22, 25-21 எனும் செட்களில் மதுரை ஸ்ரீ மீனாட்சி அரசு மகளிர் கல்லூரி வெற்றி பெற்றது. மூன்றாவது ஆட்டத்தில் பாத்திமா கல்லூரியும், சிவகாசி அஞ்சாக் கல்லூரியும் மோதின. இதில் 25-7, 25-11 எனும் செட்களில் பாத்திமா கல்லூரி வெற்றி பெற்றது. நான்காவது ஆட்டத்தில் விருதுநகர் எஸ்.எப்.ஆர் கல்லூரியும், மதுரை யாதவர் கல்லூரியும் மோதின. இதில் 25-23, 25-20 எனும் செட்களில் எஸ்.எப்.ஆர் கல்லூரி வெற்றி பெற்றது.

     செவ்வாய்க்கிழமை(செப்.29) நடைபெறவுள்ள அரையிறுதி ஆட்டத்தில் டோக் பெருமாட்டி கல்லூரியும், விருதுநகர் எஸ்.எப்.ஆர் கல்லூரியும் மோத உள்ளன. இரண்டாவது ஆட்டத்தில் பாத்திமா கல்லூரியும், ஸ்ரீ மீனாட்சி கல்லூரியும் மோத உள்ளன. இதைத்தொடர்ந்து மாலை இறுதிப் போட்டி நடைபெற உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai