Enable Javscript for better performance
மதுரையில் ஒரே நாளில் 82 மில்லிமீட்டர் மழை- Dinamani

சுடச்சுட

    

    மதுரை மாநகர் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் 82 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது.

     மதுரை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கடும் வெயில் கொளுத்திய நிலையில், சில நாள்களாக அவ்வப்போது லேசான மழை பெய்தது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடிமின்னல் காற்றுடன் மழை பெய்தது.

     மதுரை மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்): மதுரை 82, வாடிப்பட்டி ஆண்டிப்பட்டி பங்களா 56, குப்பணாம்பட்டி 8.2, சாத்தையாறு 20, மேட்டுப்பட்டி 48, கள்ளந்திரி 33, சிட்டம்பட்டி 77, புலிப்பட்டி 55, மேலூர் 41, தனியாமங்களம் 25, இடையபட்டி 85, விரகனூர் 41 என மழை பதிவாகியுள்ளது.

     மதுரை மாநகரில் மழையால் சாலைகளில் தண்ணீர் தேங்கியது. சிம்மக்கல் அருகே பாதாள சாக்கடைப் பணிக்காகத் தோண்டப்பட்ட இடத்தில் பள்ளம் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பல சாலைகள் சகதியும் சேறுமாக இருந்தன. கனகவேல் காலனி புகுதியில் சாலையில் தண்ணீர் தேங்கின.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai