Enable Javscript for better performance
மதுரை கீழடியில் அகழ்வாராய்ச்சி இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும்: ஜி.கே.வாசன் - Dinamani

சுடச்சுட

    

    மதுரை கீழடியில் அகழ்வாராய்ச்சி இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படவேண்டும்: ஜி.கே.வாசன்

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற்றுள்ள அகழ்வாராய்ச்சியில் கிடைத்தவற்றை அருங்காட்சியமாக வைக்க அரசு இடம் அளிக்கவேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

     இதுகுறித்து மதுரையில் அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை விவரம்: இந்திய தொல்லியல் துறையால் சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் தனிநபர் பெயராக தமிழ் பிராமி எழுத்து பொறித்த பானை ஓடுகள் மற்றும் வீடுகள், 3 உறை கிணறுகள், சங்ககால மட்கலன்கள், ஈட்டிமுனைகள், அம்புமுனைகள், தாயக்கட்டைகள் மீன்சின்னம் வரையப்பட்ட ஓவியங்கள் உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன. இவை சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பு புதையுண்ட நகர் பகுதியாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

     தமிழகத்தில் அரிக்கமேடு, காவேரிப்பூம்பட்டிணம் ஆகியவற்றுக்குப் பிறகு மிகத் தொன்மை மிக்க முக்கிய அகழ்வாராய்ச்சியாகவே கீழடி கருதப்படுகிறது. ஆகவே அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட இடத்தை பாதுகாத்து அருங்காட்சியமாக மாற்றவும், தொல்பொருள்களை காட்சிப்படுத்தவும் கீழடியில் சுமார் 2 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இடத்தை மாநில அரசு அளித்தாலே அருங்காட்சியகம் அமைக்கமுடியும். ஆகவே அதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ளவேண்டும். மத்திய தொல்லியல் துறையும் தொடர்ந்து அகழ்வாய்வை மேற்கொள்ளவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai