Enable Javscript for better performance
மதுரை: சிறையில் ரூ.25 லட்சத்தில் செயற்கை செங்கல் தயாரிப்பு பிரிவு- Dinamani

சுடச்சுட

    

    மதுரை: சிறையில் ரூ.25 லட்சத்தில் செயற்கை செங்கல் தயாரிப்பு பிரிவு

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:26 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை மத்திய சிறையில் ரூ.25 லட்சத்தில் செயற்கைச் செங்கல் தயாரிப்புப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என சிறைக் கண்காணிப்பாளர் ரா.அறிவுடைநம்பி கூறினார்.

     மதுரை மாவட்ட நிர்வாகம் ஏற்பாட்டின் பேரில் மத்திய சிறை மேம்பாட்டுப் பணிகளை பார்வையிட வந்த செய்தியாளர்களிடம் அவர் திங்கள்கிழமை கூறியதாவது: மதுரை மத்திய சிறையில் சுமார் 1300 கைதிகள் உள்ளனர். இவர்களில் 750 பேருக்கும் மேற்பட்டோர் தண்டனைக் கைதிகள். அவர்களுக்கு பல்வேறு தொழிற் பயிற்சி அளிக்கப்பட்டு, தகுதிக்கேற்ப தொழில் வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன. அதன்படி 40 வகையான தொழில்கள் நடக்கின்றன.

     சிறைவாசிகள் உற்பத்திய செய்பவை அனைத்தும் சிறை இல்லவாசிகள் சந்தை மூலம் அவை பொதுமக்களுக்கு விற்கப்படுகின்றன.

     மலர், மூலிகைச் செடி உற்பத்தி செய்து மிகக்குறைந்த விலையில் மாதம் ரூ.32,000 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது. செயற்கை முறையிலான செங்கல் தயாரிக்கும் பிரிவு ரூ.25 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் தயாராகும் செங்கலை தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரிய பிரிவு கொள்முதல் செய்யவுள்ளனர்.

     சிறையில் தினமும் சுமார் 20 ஆயிரம் லிட்டர் கழிவு நீரைச் சுத்தம் செய்து மறுசுழற்சி மூலம் காய்கறி, வாழை, முட்டைக் கோஸ், கீரை ஆகியவற்றுக்கு சொட்டு நீர் பாசனமுறையில் பயன்படுத்தப்படுகிறது.

     கடந்த ஓராண்டில் சுமார் 400 கிலோ மீன் வளர்க்கப்பட்டு விற்கப்பட்டது. ஞாயிறு தோறும் மீன் விற்கப்படவுள்ளது. கடலில் வளரும் அபூர்வ வாவல் உள்ளிட்டவை வளர்க்கப்பட்டு விற்கப்படுகின்றன.

     காளான் வளர்ப்பு, துணி தேய்ப்பகம் மூலம் சிறைவாசிகள் வருவாய் ஈட்டுகின்றனர். சிறைவாசிகள் மூலம் மாதம் 3 லட்சம் நாப்கின் தயாரிக்கப்படுகிறது. அரசு அலுவலகம் மற்றும் மருத்துவமனைக்குத் தேவையான கடித உறைகள், காடா துணிகளும் சிறைக்குள் தயாரிக்கப்படுகிறது. கடந்த 2 ஆண்டில் இல்லவாசிகள் தயாரிப்பில் ரூ.12.14 லட்சம் லாபம் கிடைத்துள்ளது. நன்னடத்தை அடிப்படையில் சிறைவாசிகள் குடும்பத்தினருடன் தனியாக சந்திக்க அனுமதிக்கிறோம்.

     மகளிர் சிறை: மதுரையில் மகளிர் சிறைப்பிரிவு கட்டடப் பணிகள் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. ஓரிரு மாதத்தில் 200  பெண்களை அடைக்கும் வகையில் அச்சிறை செயல்படும் என்றார்.

     செய்தியாளர் பயணத்துக்கான ஏற்பாடுகளை மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில் அண்ணா செய்திருந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai