Enable Javscript for better performance
மதுரை: 33 பவுன் நகை திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மதுரையில் வெளியூர் சென்றிருந்த மூதாட்டி வீட்டில் 33 பவுன் நகைகளைத் திருடிய மர்மநபர்களைப் போலீஸார் தேடிவருகின்றனர்.

     மதுரை சொக்கநாதபுரம் விநாயகர் தெருவைச் சேர்ந்த செளந்திரபாண்டி மனைவி ராஜம்மாள் (60). இவர் கடந்த 18-ம் தேதி பெங்களூருவில் உள்ள மகனைப் பார்க்கச் சென்றுவிட்டார். இந்தநிலையில் வீட்டின் முன்பக்கக் கதவு திறந்திருப்பதாக கடந்த 26-ம் தேதி அக்கம்பக்கத்தினர் ராஜம்மாளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

     பெங்களூருவிலிருந்து மதுரைக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த ராஜம்மாள் வீட்டில் சென்று பார்த்தபோது கீழ்தளம், மாடியிலிருந்த இரு பீரோக்கள் உடைக்கப்பட்டிருந்தன. கீழ்தளப் பீரோவில் இருந்த 33 பவுன் தங்கநகைகள் மற்றும் அமெரிக்க டாலர்கள் திருடுபோயிருந்தன. இதுகுறித்து ராஜம்மாள் அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் குற்றப்பிரிவினர் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai