Enable Javscript for better performance
மலேசியாவில் கொத்தடிமையாக இருக்கும் கணவர்-மகனை மீட்கப் போராடும் பெண்: ஆட்சியரிடம் புகார்- Dinamani

சுடச்சுட

    

    மலேசியாவில் கொத்தடிமையாக இருக்கும் கணவர்-மகனை மீட்கப் போராடும் பெண்: ஆட்சியரிடம் புகார்

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:40 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மலேசியாவில் கொத்தடிமைகளாக வேலை செய்து வரும் கணவர், மகனை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம், மதுரை அவனியாபுரத்தை சேர்ந்த மாரியம்மாள் என்பவர் புகார் தெரிவித்தார்.

    அவர் கூறியது:

     கடந்த 4 மாதங்களுக்கு முன்பு எனது கணவர் மகாலிங்கம், மகன் கார்த்திக், தங்கை  கணவர் முனியசாமி ஆகியோர் மலேசியாவுக்கு வேலைக்குச் சென்றனர். மூவருக்கும் தலா ரூ.1.20 லட்சம் பெற்றுக் கொண்டு மதுரை எழுகடல் தெருவில் ஜவுளிக் கடை உரிமையாளர் இவர்களை மலேசியாவுக்கு அனுப்பி வைத்தனர்.  ஆனால், அவர்கள் அங்கு சென்ற பிறகு தொடர்பு கொள்ள முடியவில்லை.

     இதுபற்றி ஜவுளிக் கடை உரிமையாளரிடம் கேட்டதற்கு, 3 மாதங்களுக்குப் பிறகு தான் அவர்களுடன் பேச முடியும் என்று கூறிவிட்டார். இந்நிலையில், செப்.25 ஆம் தேதி எனது தங்கையின் கணவர் முனியசாமி, இந்தியாவிற்கு திருப்பி அனுப்பிவிட்டனர். எனது கணவர், மகன் உள்ளிட்ட மூவரும் மலேசிய நிறுவனத்தில் கொத்தடிமைகளாக வேலை செய்ததாகத் தெரிவித்தார். வேலையளிக்கும் நிறுவனத்தினர் அடித்துக் கொடுமைப்படுத்தியதாகவும், அதனால் உடல்நிலை மோசமடைந்ததையடுத்து அவரை மட்டும் அனுப்பிவிட்டதாகவும் கூறினார்.

     ஆனால், எனது கணவரும், மகனும் மேற்படி மலேசிய நிறுவனத்தில் கொத்தடிமைகாக வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு சரியான உணவு கொடுப்பதில்லை. இதனால் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் துன்பப்பட்டு வருகின்றனர். மலேசியாவுக்கு அனுப்பி வைத்த ஜவுளிக் கடை உரிமையாளரிடம் இதுபற்றி கேட்டதற்கு, சரியான பதில் இல்லை.

     ஆகவே, எனது கணவர் மற்றும் மகனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மலேசியாவில் வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றிவர் மீதும் சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai