Enable Javscript for better performance
மேலும் 4 நாள் போலீஸ் காவல் கோரும் மனு: அட்டாக்பாண்டியை இன்று ஆஜர்படுத்த உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    மேலும் 4 நாள் போலீஸ் காவல் கோரும் மனு: அட்டாக்பாண்டியை இன்று ஆஜர்படுத்த உத்தரவு

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலும் 4 நாள்கள் விசாரிக்க அனுமதிகோரும் மனு மீதான விசராணைக்கு, அட்டாக்பாண்டியை செவ்வாய்க்கிழமை (செப்.29) ஆஜர்படுத்த மதுரை நீதிமன்றம் உத்தரவிட்டது.

     திமுக பிரமுகர் பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் தேடப்பட்ட மற்றொரு திமுக பிரமுகர் அட்டாக் பாண்டி அண்மையில்  மும்பையில் கைது செய்யப்பட்டார். அவரை 4 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க மதுரை நீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து அட்டாக்பாண்டியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்பு ஞாயிற்றுக்கிழமை மாலை நீதிமன்றத்தில் மீண்டும் அவரை ஆஜர்படுத்தினர். அப்போது, அட்டாக்பாண்டியை மேலும் 4 நாள்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரும் மனுவை போலீஸார்  தாக்கல் செய்தனர். அதில், அட்டாக்பாண்டியிடம் விசாரணை நடத்தினோம். அதில் அவர், தனக்கும் பொட்டுசுரேஷூக்கும் அரசியல் ரீதியான முன்பகை இருந்ததாக கூறியுள்ளார். ஆனால் கொலை சம்பவத்துக்கு முன்பு அவர் தலைமறைவாக இருந்துள்ளார். அப்போது அவர் சென்னையில் தங்கியிருந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன. அதுகுறித்து கேட்டதற்கு, கட்சிப்பணி தொடர்பாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், மத்திய முன்னாள் அமைச்சர் மு.க.அழகிரியின் மகன் துரைதயாநிதி ஆகியோரை சந்தித்து பேசியதாக கூறியுள்ளார். இந்த சந்திப்புகள் குறித்து விரிவாக விசாரிக்க வேண்டியிருப்பதால், மேலும் 4 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தனர்.

     இம்மனு மதுரை 2 ஆவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் கே.எஸ்.பாண்டியன் முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. முதலில், மனு மீதான விசாரணையை சிறிது நேரம் மாஜிஸ்திரேட் ஒத்திவைத்தார். பிறகு மாலையில் மீண்டும் மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், போலீஸ் காவல் கோரும் மனுவை சம்பந்தப்பட்ட நபர் முன்னிலையில் தான் விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தார். அட்டாக்பாண்டி பாளையங்கோட்டை சிறையில் உள்ளதால் அழைத்து வந்து ஆஜர்படுத்த போதுமான அவகாசம் இல்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அட்டாக்பாண்டியை (செப்.29) செவ்வாய்க்கிழமை ஆஜர்படுத்த வாரண்ட் பிறப்பித்து மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai