Enable Javscript for better performance
மேலூரில் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் காய்ச்சல்- Dinamani

சுடச்சுட

    

    மேலூரில் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் காய்ச்சல்

    By மேலூர்  |   Published on : 29th September 2015 06:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மேலூரிலுள்ள அல்அமீன் அரசு உதவிபெறும் பள்ளியில் படித்துவரும் மாணவர்கள் 20-க்கு மேற்பட்டோர் மீண்டும் காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

    அல்அமீன் பள்ளியில் மாணவர்கள் 20-க்கு மேற்பட்டோர் காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகி மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் பள்ளியை ஆய்வுசெய்து கும்பைமேட்டின் அருகிலிருந்த குடிநீர் குழாய் இணைப்பை மாற்றியமைக்குமாறு உத்தரவிட்டார். மேலும் இப்பள்ளி மாணவர்கள் வசித்துவரும் ஆறுகிராமங்களில் முழுமையான சுகாதாரப்பணிகளும் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்க ஆட்சியர் உத்தரவிட்டார்.

    இந்நிலையில், இப்பள்ளி மாணவர்கள் 20 பேர்வரை மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பலர் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai