Enable Javscript for better performance
லாரி ஸ்டிரைக்: மதுரையில் இன்று முதல் சரக்குகள் முன்பதிவு நிறுத்தம்- Dinamani

சுடச்சுட

    

    லாரி ஸ்டிரைக்: மதுரையில் இன்று முதல் சரக்குகள் முன்பதிவு நிறுத்தம்

    By  மதுரை  |   Published on : 29th September 2015 06:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தையொட்டி மதுரையில் செவ்வாய்க்கிழமை (செப்.29) முதல் சரக்குகள் முன்பதிவு செய்வது நிறுத்தப்படுகிறது.

     சுங்கச் சாவடி கட்டணத்தை முறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி லாரி உரிமையாளர்கள் அக்.1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் ஏறத்தாழ 2 ஆயிரம் சரக்கு லாரிகள் உள்ளன.

    இவற்றில் 750 லாரிகள் தேசிய அனுமதி உரிமம் பெற்றவை. தினமும் 800-க்கும் மேற்பட்ட லாரிகள் மதுரையில் இருந்து வடமாநிலங்களுக்கு செல்கின்றன. அதே எண்ணிக்கையில் வடமாநிலங்களில் இருந்து லாரிகள் மதுரைக்கு வருகின்றன.

      வெளிமாநிலங்களில் இருந்து வெங்காயம், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசியப் பொருள்கள் லாரிகளில் கொண்டு வரப்படுகின்றன. லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தால், அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரக்கூடிய நிலை இருக்கிறது.

     இதுகுறித்து மதுரை மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் பி.சாத்தையா கூறியது:

     நாடு முழுவதும் 350-க்கும் மேற்பட்ட சுங்கச் சாவடிகள் இருக்கின்றன. இவற்றில் தமிழகத்தில் மட்டும் 41 சுங்கச்சாவடிகள் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் என்ற அடிப்படையில் கட்டணம் உயர்த்தப்படுகிறது. ஆனால், போக்குவரத்து அதிகரிக்கும்பட்சத்தில் கட்டணத்தை உயர்த்தக் கூடாது என்ற விதி உள்ளது.

    போக்குவரத்து உயர்ந்த நிலையிலும், கட்டண உயர்வு தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    லாரி உரிமையாளர்கள் சுங்கக் கட்டணம் வசூலிப்பதை எதிர்க்கவில்லை. அதை முறைப்படுத்துவதை வலியுறுத்துகிறோம்.

     கோரிக்கைகள் குறித்து மத்திய அரசு பேச்சு நடத்துவதாகக் கூறினாலும், சுமுக முடிவு ஏற்படவில்லை. ஆகவே, அக்.1 ஆம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும். வெளிமாநிலங்களுக்குச் செல்லும் லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளன. மதுரையில் 264 லாரி முன்பதிவு அலுவலகங்கள் உள்ளன. இவற்றில் சரக்குகள் முன்பதிவு செவ்வாய்க்கிழமை முதல் நிறுத்தப்படுகிறது என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai