Enable Javscript for better performance
வருமானவரி செலுத்துவோர்க்கான விழிப்புணர்வு கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வருமானவரி செலுத்துவோர்க்கான விழிப்புணர்வு கூட்டம்

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வருமானவரி செலுத்துவோர்கான விழிப்புணர்வு கூட்டம் மடீட்டசியா அரங்கில் திங்கள்கிழமை நடைபெற்றது.

     இந்தக் கூட்டத்திற்கு மடீட்சியா தலைவர் எல்.முராரி தலைமை வகித்தார். செயலர் கே.பி.முருகன் வரவேற்றார். இதில் வருமானவரி செலுத்துவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான கேள்விகளுக்கு வருமானவரித்துறை மதுரை மண்டல இணை ஆணையர் எஸ்.ரங்கராஜன் பதிலளித்தார்.

     அவர் பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும் செலுத்தும் வருமான வரி நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக அமையும். அனைவரும் பொறுப்புணர்வோடு வருமானவரி செலுத்தினால் பொதுமக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி செயல்படுத்தப்படும். சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நாட்டின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு தனி நபரின் வருமானத்திலும் 90 சதவீதம் வரியாக வசூலிக்கப்பட்டது. தற்போது இந்நிலை மாறி 30 சதவீதத்திற்கும் குறைவாகவே வரியாக வசூலிக்கப்படுகிறது. நம் நாட்டின் பொருளாதாரம் சீரான முறையில் இயங்குவதற்கு வருமான வரியும் முக்கிய காரணமாகும். இதைக் கருத்தில் கொண்டு பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் நம் நாட்டின் முறையை பின்பற்றுகின்றன. நம் நாட்டிற்கு வருமான வரி மற்றும் மாநகராட்சி வரி மூலம் 34 சதவீதம் நேரடி வரியாக கிடைக்கிறது. இதைக் கொண்டு அடிப்படை தேவைகள் செயல்படுத்தப்படுகிறது.

     ரூ.30 லட்சத்திற்கு மேல் சொத்து வாங்குவோர், கடன் அட்டைகள் பயன்படுத்தி ஆண்டுக்கு ரூ.2 லட்சத்திற்கும் மேல் செலவு செய்பவர்கள் அனைவரும் வருமான வரித்துறையின் கண்காணிப்பின் கீழ் வைக்கப்படுவார்கள். தொழில்நுட்ப வசதிகள் பெருகியுள்ளதால் வருமான வரி செலுத்தாதவர்களை கண்காணிப்பது எளிதாகிவிட்டது. வருமான வரியை முறையாக செலுத்துவதன் மூலம் எதிர்காலத்தில் தொழில் தொடங்குபவர்களுக்கு வங்கிகளில் கடன் வசதி பெறுவது சுலபமாகும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai