வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்பு
By மதுரை | Published on : 29th September 2015 06:36 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
வழக்குரைஞர்கள் சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞர்கள் நீதிமன்ற பணிகளை திங்கள்கிழமை புறக்கணித்தனர்.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விவகாரத்தில் 14 வழக்குரைஞர்கள் தொழில்செய்ய தாற்காலிக தடை விதித்து அகில இந்திய பார்கவுன்சில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை திரும்பப்பெறக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வழக்குரைஞர் சங்கம் (எம்பிஎச்ஏஏ) நீதிமன்றப்பணிப்பு போராட்டம் அறிவித்தது. இந்நிலையில் திங்கள்கிழமை பெரும்பாலான வழக்குரைஞர்கள் பணிகளைப் புறக்கணித்தனர். வழக்குரைஞர்கள் இல்லாத நிலையில் மனுதாரர்களே வழக்குகளில் நேரில் ஆஜராயினர்.