Enable Javscript for better performance
வேகத்தடைகள் விதிப்படி அமைக்கப்படுகிறதா? மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு  - Dinamani

சுடச்சுட

    

    வேகத்தடைகள் விதிப்படி அமைக்கப்படுகிறதா? மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவு 

    By மதுரை  |   Published on : 29th September 2015 06:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரையில் விதிகளின் படி வேகத்தடைகள் அமைக்கப்படுகின்றனவா என்பதற்கு மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது.

     மதுரை லேக் ஏரியா குடியிருப்போர் சங்கத்தலைவியும் வழக்குரைஞருமான கிருஷ்ணவேணி தாக்கல் செய்த மனு: மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே பிரதான சாலையில் இருந்து லேக் வியூ சாலை பிரியும் பகுதியில் விதிகளுக்கு முரணாக வேகத்தடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் வேகத்தடையை அகற்றி வேறு இடத்தில் முறைப்படி அமைக்க உத்தரவிடவேண்டும் எனக்குறிப்பிட்டிருந்தார்.  மதுரையில் பல இடங்களிலும் சாலைகளில் இதுபோன்று விதிகளை மீறி வேகத்தடைகள் அமைக்கப்பட்டிருப்பதாக அதில் சுட்டிக்காட்டியிருந்தார்.

     இம்மனு நீதிபதிகள் ஆர்.சுதாகர், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.  மனுவை விசாரித்த நீதிபதிகள்,  இந்திய ரோடு காங்கிரஸ் நிர்ணயித்துள்ள விதிகளின் படி மதுரையில் வேகத்தகடைகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்படுகின்றனவா என்பது குறித்து பதிலளிக்குமாறு மாநகராட்சி ஆணையருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அக்.13 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. 

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai