Enable Javscript for better performance
ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    ஏழைகாத்த அம்மன் கோயில் திருவிழா: பல்லாயிரக்கணக்கானோர் வழிபாடு

    By மேலூர்  |   Published on : 30th September 2015 07:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வெள்ளலூர் அருள்மிகு ஏழைகாத்த அம்மன்கோயில் புரட்டாசி மதுஎடுப்புத் திருவிழாவையொட்டி பல்லாயிரக்கணக்கானோர் திரண்டுவந்து வழிபட்டனர்.

     ஏழைகாத்த அம்மன்கோயில் திருவிழா சகோதரிகள் பாசஉணர்வுக்கு எடுத்துக்காட்டாக ஆண்டுதோறும் நடைபெற்றுவருகிறது. (செப்.15) செவ்வாய்க்கிழமை வெள்ளலூரில்  அம்மனாக 7 சிறுமியர் தேர்வுசெய்யப்பட்டனர். அவர்கள் வெள்ளலூர் கோயில் வீட்டில் தங்கவைக்கப்பட்டனர்.

    விழாவின் முக்கிய நிகழ்வாக செவ்வாய்க்கிழமை வெள்ளலூர் நாடு என்று அழைக்கப்படும் 58 கிராமங்களைச் சேர்ந்த மக்களும் திரண்டுவந்து வெள்ளலூரில் அம்மனை வழிபட்டனர். பின்னர் 11 கி.மீ. தொலைவில் கோவில்பட்டியிலுள்ள ஏழைகாத்த அம்மன் கோயிலுக்கு 7 அம்மன்கள், மதுக்கலயம் எடுத்த நூற்றுக்கணக்கானோர், சுடுமண் குழந்தை பொம்மைகளை எடுத்துவந்த ஆயிரக்கணக்கானோர் ஊர்வலமாகப் புறப்பட்டனர். இவர்கள் மேலவலசை, கோட்டநத்தம்பட்டி, நாயத்தான்பட்டி வழியாகச் சென்றனர். வழிநெடுகிலும் அம்மனுக்கு சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. ஊர்வலத்தில் பலர் வண்ண காகிதத்திலான பூக் குடைகளையும் எடுத்துவந்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai