Enable Javscript for better performance
காந்தி ஜயந்தியன்று ஆடு, மாடு வதைக்குத் தடை- Dinamani

சுடச்சுட

    

    காந்தி ஜயந்தி அன்று மதுரையில் ஆடு, மாடு வதைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

     இதுகுறித்து மாநகராட்சி சார்பில் விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பு விவரம்: மதுரை மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அரசின் உத்தரவுப்படி காந்தி ஜயந்தி (அக்.2) அன்று இறைச்சி விற்பனை மற்றும் ஆடு, மாடு வதைக்கு தடை விதிக்கப்படுகிறது.

     ஆகவே காந்தி ஜயந்தி அன்று ஆடு, மாடு, கோழி மற்றும் பன்றி போன்ற உயிரினங்களை வதை செய்யக்கூடாது.

    இறைச்சிக் கடைகளையும் திறந்துவைக்கக் கூடாது. மீறிச்செயல்படும் கடைகளில் உள்ள இறைச்சி பறிமுதல் செய்யப்படுவதுடன், சட்டப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai