Enable Javscript for better performance
காமராஜர் பல்கலை., சட்டக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    காமராஜர் பல்கலை., சட்டக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By மதுரை  |   Published on : 30th September 2015 07:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கல்லூரி மற்றும் சட்டக் கல்லூரி முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     திருவனந்தபுரம் தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்ற இந்திய மாணவர் சங்கத்தினர் தாக்கப்பட்டனர் மற்றும் தமிழை வழக்காடும் மொழியாக அறிவிக்க வேண்டும் என்று சென்னையில் வழக்குரைஞர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட மதுரை சட்டக் கல்லூரி மாணவர்கள் 6 பேர் கல்லூரியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

    இந்த இரு சம்பவங்களுக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

     மதுரை சட்டக் கல்லூரி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 6 மாணவர்களின் இடைநீக்க நகல் எரிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டங்களுக்கு இந்திய மாணவர் சங்க மாநிலத் தலைவர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் பாவல், மாவட்டத் தலைவர் செல்வா, நிர்வாகிகள் வேல்தேவா மற்றும் பகத்சிங் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai